TN Weather: வெளுத்து வாங்கப்போகும் அதி கனமழை.. 3 மாவட்டங்களுக்கு RED ALERT! – Kumudam

Spread the love

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கோவை, கடலூர், தஞ்சாவூர் உள்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும். அடுத்து உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ என பெயர் வைக்கப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் & ஆரஞ்சு அலெர்ட்

இந்த நிலையில், இன்று (அக்.24) நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.25): திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, கரூர், திருப்பூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காண முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *