அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.
போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

யாருக்கு என்ன வயது உயர்வு?
மேல்வரம்பு வயது உயர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற கைம்பெண்கள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும்.
1. குரூப் – I பதவிகள்:
– பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு
– ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): 37-ல் இருந்து 42 ஆக உயர்வு
– மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47
– மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: 47-ல் இருந்து 52 வரை