கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’.
இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (ஆகஸ்ட்.8) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நயன்தாரா, “நிறைய நடிகர்-நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தபோது நான் நடிக்க மறுத்தேன்.