Train: “விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்” – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!| Vignesh Shivan moved by the support given by Vijay Sethupathi.

Spread the love

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சவால்களைத் தாண்டி ஒரு திரைப்படத்தை எடுத்து, அதைத் திரையரங்கு வரை கொண்டு வந்து சேர்ப்பதே ஒரு மிகப்பெரிய சாதனை, அதுவே ஒரு “சூப்பர் ஹிட்’ வெற்றிக்குச் சமம்.

என்னுடைய ‘எல்.ஐ.கே’ திரைப்படத்தில் மிஷ்கின் சார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் இந்தப் படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

Train டீசர் வெளியீடு

Train டீசர் வெளியீடு

அன்பானவர்

அதன் பிறகு, ஒரு அவசர சூழலில் நள்ளிரவு 10 மணிக்கு அவருக்கு மெசேஜ் அனுப்பி, மறுநாள் படப்பிடிப்பிற்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துத் தரக் கேட்டேன். எவ்விதத் தயக்கமும் இன்றி, உடனடியாக வந்து நடித்துக் கொடுத்தார். எப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு வழிகாட்டியோ, மென்டரோ தேவையோ அப்போதெல்லாம் அவரது அலுவலகக் கதவுகள் எனக்காகத் திறந்திருக்கும்.

அந்த அளவிற்கு அன்பானவர் அவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *