சென்னையில் 6 அமைச்சர்கள், நாமக்கல் மாவட்டத்துக்கு 3 அமைச்சர்கள், காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள். சேலம், செங்கல்பட்டு, கடலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 அமைச்சர் பதவி வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.
19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
தமிழக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தவெக வெற்றி பெறாத குமரி மாவட்டத்தில் மட்டும் காங்கிரசிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது