TVK: "அயோக்கியர்களிடம் தமிழக மக்கள் முற்றிலுமாக வெறுத்துப் போய்விட்டார்கள்" – மார்க்கண்டேய கட்ஜு

Spread the love

இன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார்.

“திராவிட சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, அதை வைத்துப் பல கோடி ரூபாய் சம்பாதித்த அந்த அயோக்கியர்களிடமும் (திமுக மற்றும் அதிமுக) தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக வெறுத்துப் போய்விட்டார்கள்.

அதனால் அவர்கள் மூன்றாவது மாற்றாக ஒரு நடிகனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

தலையில் ஒன்றுமில்லாத, தமிழ்நாட்டின் பெரும் சமூக-பொருளாதாரப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்று துளியும் தெரியாத ஒரு கோமாளியின் பின்னால் மக்கள் சென்றிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், மக்கள் இப்போது ‘சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதையாக’ ஆகிவிட்டார்கள்”.

இந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார் மே17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி…

“சார்,

இந்திய நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகும் உரிமை முதல் பாபர் மசூதி தீர்ப்பு வரை; சி.ஏ.ஏ முதல் தமிழக மீனவர்களின் உரிமைகள் வரை;

ரஃபேல் ஊழல் முதல் பி.எம். கேர்ஸ் நிதி வரை; பீமா கோரேகான் வழக்கு முதல் குஜராத் கலவரம் வரை; இடஒதுக்கீடு, நீட், இ.டபிள்யூ.எஸ் முதல் சனாதனம் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் வழக்கு வரை… நீதி எங்களுக்குக் கிடைக்காத இடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆனாலும், நீதிபதிகளின் அசைக்க முடியாத அதிகாரத்திற்காக இன்றும் நாங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.

நாங்கள் ‘கட்டப்பஞ்சாயத்தில்’ இருந்து தப்பி ‘ஆரிய நீதிமன்றங்களிடம்’ வந்து சேர்ந்திருக்கிறோம்; இது சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதையாகத்தான் இருக்கிறது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *