இதனிடையே தனது கணவரின் இந்த முடிவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலாதான் காரணம் எனப் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவகி, “‘விஜய் மக்கள் கழகத்தின் உறுப்பினராக இருந்து ஆரம்பக் காலம் முதல் விஜய்க்காக உழைத்து வந்தோம். தேர்தலின்போது ராத்திரி பகல் பாராமல் கட்சி வேட்பாளருக்காக உழைத்தோம். கட்சிக்காகச் செலவு செய்து பல லட்ச ரூபாயினை இழந்துள்ளோம். இதனைத் தொடர்ந்து எனது கணவருக்கு வார்டு செயலாளர் பதவி கிடைத்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் எனது கணவரை வார்டு செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா, வேறு ஒருவருக்கு அப்பதவியைக் கொடுத்துள்ளார். இது குறித்து கேட்க சென்ற எனது கணவரை மாவட்ட செயலாளரும் அவரது கணவரும் சேர்ந்து தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.
மேலும் கட்சிக்காரர்கள் யாரும் என் கணவருடன் பேச கூடாது எனத் தடை போட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த எனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனது கணவரின் இறப்புக்குக் காரணமான மாவட்ட செயலாளர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் கூறியுள்ளார்.
பதவி பறிபோனதால் த.வெ.க நிர்வாகி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.