Tvk leading in 5 constituencies in Coimbatore as of 12 noon – கோவை 12 மணி நிலவரம் : 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை!

Spread the love

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் த.வெ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

12 மணி நிலவரப்படி கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தி.மு.க வேட்பாளர்கள் கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். வால்பாறை தொகுதியில் தி.மு.க, த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறி மாறி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *