TVK Surrounds Sengottaiyan to Thirumavalavan’s Heartfelt Reaction: Today’s Political உப்டடேஸ் / செங்கோட்டையனை சுத்துப்போடும் த.வெ.க-வினர் டு மனம் வருந்தும் திருமா | கழுகார் அப்டேட்ஸ்

Spread the love

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டன. த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கும் நிலையில், போட்டியிடாத மற்ற கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள். மதுராந்தகத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பா.ம.க மட்டும் இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது.

சூரியக் கட்சியின் மேலிட குடும்பப் புள்ளி, பா.ம.க தலைமையிடம் நேரடியாகப் பேசி “நம்ம கூட்டணிக்கு வந்துவிடுங்கள்… நாங்களும் ஓ.பி.சி அரசியலைதான் முன்னெடுக்கிறோம்’ என பேசிப் பார்த்தாராம். இலைக் கட்சிப் புள்ளிகளும், ‘நமக்கு ஆதரவு தெரிவித்துவிடுங்கள்’ என வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்களாம். ஆனால், இரண்டு தரப்புக்கும் பிடிகொடுக்காமல் இருக்கிறதாம் பா.ம.க தலைமை. ஆளும்தரப்பும் பல்வேறு ரூட்டுகளில் பா.ம.க தலைமையை அணுகியிருப்பதால், ‘இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்’ என பா.ம.க அறிவித்துவிடுமோ என அஞ்சுகிறார்களாம் இலைக் கட்சி நிர்வாகிகள் சிலர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *