U19: ‘நாங்கலாம் அப்படி இல்ல.!’- இந்திய வீரர்களின் ஆக்ரோஷக் கொண்டாட்டம் குறித்து பாக். முன்னாள் வீரர்| Shoaib Akhtar on indian players celebration in u19 final

Spread the love

U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய விதம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பேசியிருக்கிறார்.

ஓமன் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்து வரை போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் முன்பு வெற்றியை ஆக்ரோஷமாகக் கொண்டாடினர்.

U19 ஆசியக் கோப்பை

U19 ஆசியக் கோப்பை

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் இந்திய வீரர்களின் கொண்டாட்டம் குறித்து பேசியிருக்கிறார்.

“நாம் கிரிக்கெட் மட்டும் விளையாடக் கூடாது, நல்ல விழுமியங்களோடும் (values) செயல்பட வேண்டும். இன்றும் கூட நான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி நல்ல விதமாகவே பேசுகிறேன்.

உலகின் சிறந்த பேட்டர் அவர்தான் என்று இப்போதும் நினைக்கிறேன். வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி என நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் இதுபோல் எதிர்வினையாற்றியதில்லை” என்றிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *