டோலிவுட் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன், சாத்விகா வீராவல்லி ஆகியோர் நடித்துள்ள “ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அல்லு அர்ஜுன் கலந்துகொண்டார்.

அல்லு அர்ஜுன் பேசுகையில், “துல்கர் சல்மானை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய முதல் மலையாளப் படத்திலிருந்தே அவரின் வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன்.
அவருடைய கதைத் தேர்வுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பன்முகத்தன்மை கொண்ட, மிக இனிமையான மனிதர் அவர். அவரை எப்போது சந்தித்தாலும், ஏற்கெனவே நன்கு பழகிய ஒருவரைச் சந்திப்பது போன்ற உணர்வே ஏற்படும்.
ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும், மிகவும் எளிமையாகவே நடந்துகொள்வார். தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். இந்தப் படத்தின் மையக்கரு மிகவும் அற்புதமானது.
ஒவ்வொரு பெண்ணின் கனவையும் நனவாக்குவதைப் பற்றியது. படத்தின் டீசரைப் பார்த்தபோதே அந்த நேர்மறையான ஆன்மாவை உணர முடிந்தது” எனப் பேசினார்.