Ukraine Attack: ரஷ்யா எதிர்பாராத இடத்தில் அடித்த உக்ரைன்! டிரம்ப் சந்திப்புக்கு முன் புதினுக்கு ஷாக் கொடுத்த ஜெலன்ஸ்கி | Ukraine Attack blows up key Crimea bridge with drones and missiles Big blow for russia

Spread the love

International

oi-Mani Singh S

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரும் வியாழக்கிழமை புதின் சந்தித்து பேச இருக்கும் நிலையில், ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்புகளில் ஒன்றான கிரிமியா பாலத்தை உக்ரைன் ஏவுகணை தாக்குதல் மூலம் சேதப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால், கிரிமியா தீபகற்பத்தையும் – ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சீனாவில் வரும் வியாழக்கிழமை சந்தித்து பேச உள்ளனர். உலகில் சக்தி வாய்ந்த நாடுகளாக இருக்கும் மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேச இருப்பதை உலகமே உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

Ukraine Attack blows up key Crimea bridge with drones and missiles Big blow for russia

இதுவரை இல்லாத தாக்குதல் இது

உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய கிரிமியாவில் கட்டப்பட்டு இருந்த பிரமாண்ட பாலத்தை உக்ரைன் டிரோன் தாக்குதல்களால் தகர்த்துள்ளது புதினுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரஷ்யாவின் உள்கட்டமைப்புகளில் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாக இந்த பாலம் இருந்த நிலையில், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்கி சேதப்படுத்தியுள்ளது உக்ரைன்.

ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்புடன் கிரிமியாவை இணைக்கும் பாலம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதால் ரஷ்யா பெரும் சிக்கலை சந்தித்து உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு, இதுவரை இல்லாத தாக்குதல் இது என்று பதிவிட்டுள்ளார்.

எங்கு தொடங்கியதோ, அங்கேயே திரும்பும்

இது குறித்து ஜெலன்ஸ்கி மேலும் கூறுகையில், ரஷ்யா ஒவ்வொரு நாளும் எங்களுடைய உள்கட்டமைப்புகளைத் தாக்கி வருகிறது. பாலங்களையும் குறிவைக்கிறது. போர் எங்கு தொடங்கியதோ, அங்கேயே அது மீண்டும் திரும்பும் என்பதை ரஷ்யாவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தாக்குதல் தொடர்பான வீடியோவையும் அதனுடன் இணைத்து வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு இந்த பாலத்தை ரஷ்யா அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், பாலம் தகர்க்கப்பட்டது போரில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் பாதுகாப்பு சேவை பிரிவு அதிகாரிகள் இந்த தாக்குதல் பற்றி கூறும் போது, ‘ரஷ்யாவின் வான் பாதுகாப்பு திறன்களை ஒடுக்கி, தாக்குதலுக்கான வாய்ப்பை ஏற்படுத்த ஒரு மாதத்திற்கு மேலாக திட்டமிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு இந்த பாலம் ஏன் முக்கியம்

19 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதற்கான முக்கிய அடையாளமாக விளங்குகிறது. 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்ட நிலையில், இந்த பாலத்தை புதினே நேரடியாக வந்து 2018 ஆம் ஆண்டு திறந்து வைத்தார். கெர்ச் ஜலசந்தியில் இருந்து ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்பை இந்த பாலம் இணைக்கிறது. ரயில் மற்றும் சாலை போக்குவரத்து என இரண்டு வழித்தடங்களையும் இந்த பாலம் கொண்டுள்ளது.

உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு உதவும் வகையில், இந்த பாலம் முக்கிய சப்ளே ரூட் ஆக விளங்கியது. இதனால், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, இந்த பாலத்தை குறிவைத்து உக்ரைன் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருந்தன. தற்போது நடத்தப்பட்ட தாக்குதலால் பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா மோதல் மீண்டும் தீவிரம்

இதனால், வணிக கப்பல்கள் போக்குவரத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கிரிமியா பாலத்தை உக்ரைன் தாக்கிய அதே நேரத்தில், ரஷ்யாவும் பதிலடியாக உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால், உக்ரைன் – ரஷ்யா மோதல் மீண்டும் தீவிரம் அடையத்தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற உள்ள டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் சந்திப்பில் போர் விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மோதல் தீவிரம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *