தவிர பட இயக்குநர் வெங்கி அட்லூரி குறித்து பேசிய அவர், “எனக்கு விஸ்வநாத்&சன்ஸ் இன்னொரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது வெங்கி. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி படம் பண்ணி… அவரோட எழுத்து மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு. இந்தப் படம் உறவுகளை பத்தி அவ்வளவு அழகா பேசும்.
இந்தப் படம் பார்க்கும் போது உங்க உதட்டு ஓரத்துல ஒரு புன்சிரிப்பு படம் முழுசும் இருக்கும். ரொமான்ஸ் பத்தி பேசும், பேமலிஸ் பத்தி பேசும். ஹீரோ எலிவேஷன் குறையவே குறையாது. ஒரு ஹோல்சம் என்டர்டெயின்மென்ட்டாக இந்தப் படம் இருக்கும்” என்றிருக்கிறார்.
பிறகு லவ் அட்வைஸ் கொடுத்த சூர்யா, ” தினம் தினம் லவ் பண்ணணும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணணும். அவங்களுக்கு மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். நம்மளும் மாறுவோம் அவங்களும் மாறுவாங்க.
20 வயசுல இருக்கிறது வேற, 25 வயசுல இருக்கிறது வேற…பல விஷயங்கள் வாழ்க்கைல மாறிட்டே இருக்கும். அன்பும் அவங்க மேல இருக்க காதலும் என்னைக்கும் மாறவே கூடாது.
ஒரு ஆண் ஒரு இடத்துக்கு போகனும்னா வண்டி எடுத்துட்டு ஒரு மணி நேரத்துல போயிடலாம். ஆனால் அதே ஒரு பெண் அந்த இடத்துக்கு போகனும்னா பத்து மணி நேரம் கூட ஆகலாம். ஏன் சொல்றேனா ?
கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்து… வீட பாத்துக்கிட்டு எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணுறது பெண்கள் மட்டும் தான். பெண்களோட வெற்றிக்கு பத்து மடங்கு இல்ல, நூறு மடங்கு சல்யூட் அடிச்சு மரியாதை கொடுங்க. அவங்களோட வெற்றிக்காக காதலை விட மரியாதை நிறையக் கொடுங்க” என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.