Washing Machine Vs vending machine… சரமாரியாக மோதிக் கொள்ளும் திமுக & தவெக..! – Kumudam

Spread the love

இதுதொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, ”மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

“தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?

#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. 

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று பதிவிட்டு இருந்தார். 

உதயநிதியின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “உளறல்நிதியின் மற்றொரு நாள். மற்றுமொரு உளறல். 

ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும்.

புதிதாகத் தொடங்கியுள்ள Sofa, table, chair, teapoy வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே sofamodel என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். Extreme-ஆக vex ஆகி விரக்தியைக் கொட்டுகிறார்.

தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும் திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி purchase செய்த funds எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.

மூச்சுவிடக்கூட Script-ஐ நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட்நிதி ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாகத் திட்டமிட்டுத் தொட்ட கதையும் தொடமுயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார்.

பற்பல லிங்கங்களையும் 
பல்வேறு செல்வங்களையும் vending machine-ல் போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி” என்று தவெக ஐடிவிங் பதிவிட்டுள்ளது. 

இப்படி மாறி மாறி தவெக, திமுக சோஷியல் மீடியாவில் மோதிக் கொள்வது அரசியல் மாண்பை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *