பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த சீனிவாசன், சென்னை காவல் ஆணையரகத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த மோசடியில் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இந்த வழக்கில் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸார் முற்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிவசங்கருக்கு அதிகாரப்பூர்வமாக சம்மன் அனுப்பியுள்ளனர்.