அவரது உடல்நிலை குறித்து நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம், ஆனாலும் அவர்களால் வர முடியவில்லை. சிவ்சரண் இறந்த பிறகு, நிர்வாகத்தினர் மீண்டும் அவரது மகள்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் சோனிபட் வந்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று கூறினர். ஆனால், பயணம் செய்வதற்குத் தங்களுக்கு நேரம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர். அதன்பின்னர், அந்தப் பெண்கள் காணொளி அழைப்பு மூலம் தகன நிகழ்வில் இணைந்து, தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளைத் தொலைவிலிருந்தே பார்த்தனர்.
நேபாளத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் சரியாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டு, இணையவழியாக ரூ. 5,100-ஐயும் அனுப்பினார். எரிப்புச் சடங்கு முடிந்த பிறகு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் காணொளிகளைத் தங்களுக்கு அனுப்புமாறு மகள்கள் கேட்டனர். இறுதிச்சடங்கின் போது அவர்களில் ஒருவர், இதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டியுள்ளது,” என்று கேட்டார்.
குப்தாவின் அஸ்தியைத் தங்களுக்குத் தருமாறு அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டனர். ஆனால் பின்னர், சோனிபட் நகருக்கு நேரில் வரத் தங்களுக்கு நேரமில்லை என்று முதியோர் இல்ல நிர்வாகத்திடம் தெரிவித்த அவர்கள், அந்த அஸ்தியை கங்கை நதியில் கரைக்குமாறு கேட்டுக்கொண்டனர்” என்றார்.