What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' – இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

Spread the love

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.

டபுள் ஆக்குபென்சி – தமிழ்

குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மூன்றாம் கண் – தமிழ்

சகோ கணேசன் எழுதி இயக்கியிருக்கும் ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Habibi Movie
Habibi Movie

ஹபீபி – தமிழ்

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா முகமது, மாளவிகா மனோஜ், அனுஸ்ரேயா ராஜன், தனஸ்ரீ சுதாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹபீபி திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆட்டி – தமிழ்

அபி நட்சத்திரா, காதல் சுகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆட்டி திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சாருகேசி – தமிழ்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய். ஜி. மகேந்திரன், சுகாசினி மணிரத்னம், சத்யராஜ், ராஜ் அய்யப்பா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாரத் பாக்ய விதாதா (Bharat Bhhagya Viddhaata) – இந்தி

மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள ‘பாரத் பாக்ய விதாதா’ படத்தில் கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே, இஷா டே, பிரசாத் ஓக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாக் ரூம்ஸ் (Backrooms) – ஆங்கிலம்

கேன் பார்சன்ஸ் இயக்கத்தில் சிவெட்டல் எஜியோஃபோர், ரெனேட் ரெயின்ஸ்வே, மார்க் டுப்ளாஸ், ஃபின் பென்னட், லுகிதா மேக்ஸ்வெல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Karuppu Movie
Karuppu Movie

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்

கருப்பு (Karuppu) – Amazon Prime Video

பூத் பங்களா (Bhooth Bangla) – Netflix

திரிடம் (Dridam) – JioHotstar

ராக் (Raakh) – Amazon Prime Video

மேட்டர்னல் இன்ஸ்டின்க்ட் (Maternal Instinct) – Netflix

தார்கடா (Taarkata) – ZEE5

Sshhh: சீசன் 3 – Aha

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *