Young woman files complaint of threat against Thoothukudi Tvk executive; police investigate-தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி மீது இளம்பெண் மிரட்டல் புகார்; போலீஸார் விசாரணை

Spread the love

தூத்துக்குடி மாவட்டம்,  ஏரல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், அந்த இளம்பெண் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய புகார் மனு ஒன்றை அளித்தார்.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம்

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம்

அந்த மனுவில், “த.வெ.க. நிர்வாகி ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் கிராம மக்கள் சிலருக்கு நான் பணம் வாங்கிக் கொடுத்தேன். நான் உட்பட அனைவரும் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டோம்.  ஆனால், அவர் தற்போது என்னிடம் மேலும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார். இப்புகார் மனு குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *