அக்சென்சர் முடிவுக்குப் பின் ஐடி துறையில் மீண்டும் ஏஐ தாக்கம்; நிபுணர் விளக்கம்|AI Is Back: Why IT Stocks Could Stay Under Pressure

Spread the love

ஏ.ஐ, சிப் தயாரிப்பு போன்றவை கடந்த பிப்ரவரி மாதம் வரை பங்குச்சந்தையின் ஐ.டி துறையில் பேச்சாக இருந்தது.

ஆனால், ஈரான் போர் தொடக்கத்திற்குப் பிறகு, பங்குச்சந்தை இந்தத் தாக்கத்தை சற்று மறைத்து வைத்தது.

ஆனால், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 18, 2026), அக்சென்சர் நிறுவனத்தின் முடிவு வெளியான பிறகு, ஏ.ஐயின் தாக்கம் மீண்டும் ஐ.டி துறையின் மையமாக மாறியிருக்கிறது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“ஐ.டி துறைக்கு ஏ.ஐ சவால் என்பது புதிது அல்ல.

ஜனவரி, பிப்ரவரி மாதம் முழுவதுமே ஐ.டி துறையில் ஏ.ஐ தாக்கம் என்பது தொடர்ந்து காணப்பட்டது.

தற்போது ஐ.டி துறை மாற்றப் பாதையில் இருக்கிறது. அதனால், இந்த நேரத்தில், ஐ.டி துறையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் இருக்கப்போவது இயல்பே. தொடர்ந்து நிலையற்றத்தன்மை நீடிக்கலாம்.

மேலும், இந்தத் துறையில் உடனடியாக இரண்டு இலக்க வளர்ச்சி கிடைக்கப் போவதில்லை.

இதற்கெல்லாம் தயாராக இருப்பது தான் முதலீட்டாளர்களுக்கான தற்போதைய அட்வைஸ்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *