“அங்கு எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது, ஆனால்.!”- பாலிவுட் குறித்து பிரித்விராஜ் | Prithviraj contrasts Malayalam films with Bollywood

Spread the love

ஓர் இயக்குநராக நான் கரீனாவுடன் இணைந்து படம் பண்ண விரும்பினால், அவருக்கு நேரடியாகவே போன் செய்து, “ஹாய், உங்களுடன் ஒரு படம் பண்ண விரும்புகிறேன். கதையைக் கூறட்டுமா?’ என்று கேட்பேன். அதற்கு அவர், ‘நான் அடுத்த மாதம் வெளியூர் பயணத்தில் இருக்கிறேன், வேறு ஒரு நாள் சந்திக்கலாம்’ என்று கூறுவார்.

ஆனால் பாலிவுட்டில் நிலைமை வேறு. நீங்கள் முதலில் ஏஜென்சியை தொடர்பு கொள்ள வேண்டும், அவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேனேஜரிடம் பேசுவார்கள். பிறகு அந்த மேனேஜர் இயக்குநரைச் சந்திக்க உங்களைச் சம்மதிக்க வைப்பார்.

நடிகர் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ்

அப்படி இணைந்து பணியாற்றச் சம்மதித்த பிறகு, ஏஜென்சி ஒரு பெரிய சம்பளத்தைக் கேட்கும். அதற்குத் தயாரிப்பு நிறுவனம் அதில் பாதியை மட்டுமே தருவதாகச் சொல்லும். அதன்பின்தான் பேச்சுவார்த்தையே தொடங்கும்.

பாலிவுட்டில் எல்லாமே கார்ப்பரேட் பாணியில் நடக்கிறது. ஆனால் விஷயங்களைச் செய்ய இதைவிட எளிமையான வழியும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *