“அமெரிக்கா தேர்தலில் சீனா தலையிட்டிருக்கிறது” – ரகசிய ஆவணத்தை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப் | Donald Trump released classified documents alleging Chinese interference in the US election.

Spread the love

ஆனால், அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் 2021-ம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ மதிப்பீட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. தற்போதைய சிஐஏ இயக்குநரும், அன்றைய உளவுத்துறை இயக்குநருமான ஜான் ராட்க்ளிஃப் தலைமையில் நடந்த ஆய்வு முடிவில், `2020 அதிபர் தேர்தலில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் என எந்தவொரு தொழில்நுட்ப அம்சத்தையும் வெளிநாட்டுச் சக்திகள் மாற்றியமைக்கவில்லை.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு சாங் கூறுகையில், “அமெரிக்க அதிபர் தேர்தல்களில் சீனா ஒருபோதும் தலையிட்டதில்லை, இனியும் தலையிடாது” என்று மறுப்புத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் மார்க் வார்னர், “ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானவை; 2020 தேர்தலில் சீனா ஒரு வாக்கைக்கூட மாற்ற முயற்சிக்கவில்லை என்பதில் உளவு அமைப்புகள் ஒருமனதாக உள்ளன” எனச் சாடியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *