அசாமில் 18 வயதுக்கு மேல் புதிய ஆதார் கார்டுக்குத் தற்காலிகத் தடை | No New Aadhaar for Adults in Assam Till March 2027

Spread the love

அஸ்ஸாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கார்டு பெற தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்த சனிக்கிழமை (ஜூன் 13), அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

என்ன அறிவிப்பு?

மாற்றுத்திறனாளிகள், பட்டியிலின மக்கள், பழங்குடிகள், டீ தோட்டத் தொழிலாளர்களைத் தவிர்த்து, 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் புதிதாக அஸ்ஸாமில் ஆதார் கார்டு பெற முடியாது.

18 வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் வழக்கம் போல, புதிதாக ஆதார் கார்டு பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

எப்போது வரை?

இந்த நடைமுறை 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

ஹிமந்த பிஸ்வா சர்மா

ஏன் இந்தத் தடை?

அஸ்ஸாமில் சட்டத்திற்குப் புறம்பாக சிலர் குடியேறியிருக்கிறார்கள் என்றும் இவர்கள் ஆதார் கார்டு பெறாமல் இருப்பதற்கே அஸ்ஸாம் அரசு இந்தச் “செக்’-ஐக் கொண்டு வந்துள்ளது என்றும் ஆளும் தரப்பில் கூறப்படுகிறது.

ஒருவேளை..?

இதையும் தாண்டி, தகுதியுள்ள ஒருவர் ஆதார் கார்டைப் பெற வேண்டுமானால், மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் சிறப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

அந்த அலுவலகம் கொடுக்கும் பரிந்துரையை வைத்து அந்த நபருக்கு ஆதார் கார்டு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *