அஜித்தின் 64-வது படம் ‘டேர் டெவில்’! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ஷாலினி | AK64 Title Announced: Ajith Kumar’s ‘Dare Devil’ Directed by Adhik

Spread the love

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘டேர் டெவில்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

‘பிரேவ் ஹார்ட்ஸ்’ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பைப் பகிர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “34 ஆண்டுகாலத் தடைகளைத் தகர்த்து, கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்து, நட்சத்திர அந்தஸ்திற்குப் புதிய இலக்கணம் வகுத்த பயணம்! பேரார்வம், விடாமுயற்சி மற்றும் நிகரற்ற வசீகரத்தால் செதுக்கப்பட்ட ஒரு பயணம்!

இந்தப் படம் சிறப்பான ஒன்றாக இருக்கப்போகிறது. என் மீதான நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அஜித்குமார் சார்! தயாரிப்பாளர் ஷாலினி மேமிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *