தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் அணியில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள். ஓர் அணியாக மிகச்சிறப்பாக இருக்கிறோம். நாங்கள் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம்.
நாங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறோம், சரியான நேரத்தில் அதற்கான பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அடுத்தடுத்த போட்டிகளுக்காக நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்.
யாராவது சிறப்பாக விளையாடினால் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று டிரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொள்வோம்.
நாங்கள் கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடுகிறோம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.