அட்டாக்கை ஆரம்பித்த அமெரிக்கா.. ஈரான் மீது சரமாரி குண்டு வீச்சு! நிலைமை மோசமாகுதே! | Iran Under Second Night of US Strikes as Ceasefire Collapses

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்கை தொடங்கியிருக்கிறது. முன்னதாக ஈரானுடன் போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறார்.

இன்று ஈரானின் புஷெர் மற்றும் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு இந்த இரண்டு இடங்களும் மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக புஷெர் பகுதியில், அணுமின் நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு தாக்குதல் நடத்துவதன் மூலம், ஈரான் முழுவதும் மின் தடையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது.

Iran

அதேபோல் கார்க் தீவு என்பது ஈரான் பொருளாதாரத்தின் இதய பகுதியாகும். ஈரானிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவில் 90% இந்த தீவின் வழியாகத்தான் செல்கிறது. மட்டுமல்லாது, இங்கு சுமார் 3 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு வசதி இருக்கிறது.

எனவே இந்த இடங்களை குறி பார்த்து தாக்குதவதன் மூலம், மீண்டும் ஈரான் எழுந்து வர முடியாதபடி செய்துவிட முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பகுதி மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *