அணுஆயுத தாக்குதல் நடத்தினால் எப்படி தப்பிக்க வேண்டும்? ஈரானின் திடீர் வீடியோ.. அமெரிக்காவால் டென்ஷன் | How to suvive a nuclear attack? Iran release video guide amid US threat of Pickaxe Mountain

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகள் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் ஈரான் மீது அணு ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்த உள்ளதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் இடைக்கால தேர்தல் முடிவுக்கு வர உள்ளது.

nuclear attack

இதனால் இஸ்ரேல் – அமெரிக்கா என்று இருநாடுகளும் சேர்ந்து மீண்டும் ஈரானை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று திடீரென்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது முன்னெச்சரிக்கை தாக்குதல் என்று சொல்லப்படுகிறது.

இதனால் வரும் நாட்களில் ஈரானை கடுமையாக அமெரிக்கா தாக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பிக்காக்ஸ் மலையை குறிவைத்துள்ளனர். இந்த மலை தான் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

இந்த பிக்காக்ஸ் மலை என்பது ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள கார்காஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இதனையொட்டியே நாதான்ஸ் அணுசக்தி வளாகம் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த மலையை குடைந்து தான் பூமிக்கடியில் அணுசக்தி திட்டத்துக்கான கட்டமைப்புகளை ஈரான் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மலையில் தாக்குதல் நடத்த இஸ்ரேல், அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக டிரம்பும் இந்த மலை மீது தாக்குதல் நடத்துவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த பதற்றத்துக்கு நடுவே தான் ஈரான் தனது நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தினால் ஒவ்வொருவரும் எப்படி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ மொத்தம் 8 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த வீடியோவில், அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எப்படி செல்வது? தங்களின் இருப்பிடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் அணுஆயுத பாதுகாப்பு இடம் அமைந்துள்ளது, வெளிப்புறத்தில் இருந்து வரும் காற்றை நிறுத்துவது எப்படி?, கதிர்வீச்சு தொடர்பான மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பது தொடர்பான விரிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர திறந்தவெளியில் யாராவது சிக்கினால் அவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளின் ஜன்னல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். கார்களில் வசிக்க கூடாது. ஜன்னல்களை அடைத்து இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜ்களை அணைத்து வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஈரான் செய்தி நிறுவனம் மட்டுமின்றி எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் செய்தி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமின்றி அணுஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் குறைந்தபட்சம் 24 மணிநேரமாவது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்கும் வகையில் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை ரெடியாக வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதற்கு முன்பும் தாக்குதல் நடத்தி உள்ளன. ஆனால் அப்போது அணுஆயுத தாக்குதல் நடந்தால் பொதுமக்கள் எப்படி தப்பிக்க வேண்டும்? என்பது தொடர்பான வீடியோவை ஈரான் வெளியிட்டது இல்லை. ஆனால் தற்போது ஈரான் முக்கிய அறிவுரைகளுடன் பொதுமக்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளது.

இதனால் ஈரான் மீது அமெரிக்கா அணுஆயுத தாக்குதலை கையில் எடுக்கிறதா? இல்லாவிட்டால் அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலில் கதிர்வீச்சு வெளியாகும் என்ற அச்சத்தில் ஈரான் இந்த வீடியோ அறிவுரையை வழங்கி உள்ளதா? என்பது பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *