`அரசூர் வம்சம், மிளகு’ நாவல்களின் ஆசிரியர் எழுத்தாளர் ரா.முருகன் மறைவு!| Writer Ra. Murugan passed away due to old age.

Spread the love

தமிழ் நவீன இலக்கிய உலகில் தனது தனித்துவமான எழுத்து நடை, சுவாரஸ்யமான கதை சொல்லும் உத்தி, சிறப்பான மொழி ஆளுமை ஆகியவற்றால் வாசகர்களைக் கவர்ந்த முக்கியப் படைப்பாளியான எழுத்தாளர் இரா.முருகன் (73) அவர்கள் இன்று காலமானார்.

சிவகங்கையில் பிறந்த இரா.முருகன், புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்தார். தனது பணியை வங்கி அதிகாரியாகத் தொடங்கி, வங்கி கணினித் துறையில் மென்பொருள் வடிவமைக்கும் தொழில்நுட்ப வல்லுநராக உயர்ந்தார். பின்னர் பன்னாட்டு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாறி இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

உன்னைப் போல் ஒருவன்: இரா.முருகன்

உன்னைப் போல் ஒருவன்: இரா.முருகன்

சென்னையில் வசித்து வந்த இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், இந்தியக் கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் முருகன் என்ற மகனும் உள்ளனர். இவரது இலக்கியப் பயணம் 1977-78 காலக்கட்டத்தில் கணையாழி இதழில் வெளியான புதுக்கவிதையின் மூலம் தொடங்கியது. எழுத்தாளர் சுஜாதாவினால் பாராட்டப்பட்ட அந்தக் கவிதையின் மூலம் கவனம் பெற்றார். தகவல் தொழில்நுட்பத் துறையைப் பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய “மூன்று விரல்’ நாவல், தமிழ் இலக்கியத்தில் மென்பொருள் துறை சார்ந்த முன்னோடிப் படைப்பாகக் கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *