“அதற்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது!” – சந்தீப் கிஷன் பேட்டி|Sundeep Kishan on Working with Jason Sanjay in Sigma | Cinema Vikatan

Spread the love

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “சிக்மா’ படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் பற்றி நம் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “இயக்குநர் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் பேசப்பட்டபோது, எனக்கும் அதுகுறித்த செய்தி கிடைத்திருந்தது. அப்போது திடீரென ஒரு நாள் எனது நண்பரும் கிரியேட்டிவ் புரொடியூசருமான சுனீஷ் எனக்கு போன் செய்து, சஞ்சய் என்னை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.

வழக்கமாக நான் அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரியவே விரும்புவேன். ஆனால் சஞ்சய்யின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததை என்னால் எதிர்பார்க்கவே முடியவில்லை.

இதையடுத்து, கதையைக் கேட்பதற்காக அவரை ஹைதராபாத் வர முடியுமா என்று கேட்டிருந்தேன். சஞ்சய்யும் ஹைதராபாத் வந்து சுமார் மூன்று மணி நேரம் மிகத் தெளிவாக கதையை விவரித்தார்.

படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்துப்போக, அங்கிருந்தே எங்கள் பயணம் தொடங்கியது. உண்மையில் இது ‘ராயன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது 2024 ஏப்ரல் மாதத்திலேயே பேசப்பட்டு உறுதி செய்யப்பட்ட கதை.

திட்டமிட்டபடி 2024 டிசம்பரிலேயே படப்பிடிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் என்னுடைய வேறொரு படத்தின் அவசர படப்பிடிப்பு காரணமாக, தொடர்ச்சியாக 57 நாட்கள் இரவும் பகலும் வேலை செய்ய வேண்டியிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *