அதிமுக உடையாது; எஸ்.பி.வேலுமணி விளக்கம்|AIADMK Not Broken, Says SP Velumani Amid Leadership Clash

Spread the love

அதிமுகவில் தற்போது பழனிசாமி அணி vs சி.வி.சண்முகம் அணி என்கிற பிரிவு உண்டாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியைத் தாண்டி, சி.வி.சண்முகம் அணி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்து நேற்று கடிதம் கொடுத்தபோதுதான் இந்தப் புகைச்சல் வெட்ட வெளிச்சமானது.

ஆனால், அதிமுக உடையவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறுகிறார். இன்று சென்னையில் சி.வி.சண்முகம் இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது…

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

“நாங்கள் அதிமுகவை இரண்டாக உடைக்கிறோம் என்றெல்லாம் எங்கள் மீது தயவுசெய்து அவதூறு பரப்பாதீர்கள். இது சிலரால் பரப்பப்படுவது. அது எங்களுக்கு நோக்கம் இல்லை.

தொடர் தோல்வி காரணமாக சில கேள்விகளை எழுப்பினோம். அதிமுக எப்போதும் உடையாது. அதற்கு காரணமாக நாங்கள் இருக்கமாட்டோம். ஆரோக்கியமாக பொதுச்செயலாளர் பொதுக்குழு கூட்டி கட்சி கட்டுக்கோப்பாகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதற்கு அவரும் இறங்கி வந்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *