அதிமுக: `நீதி வேண்டும்’- கை கொடுக்காத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? | ‘We want justice’ – Did Edappadi’s campaign fail to gain traction? What do the by-election results reveal?

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஐந்து முனைப்போட்டியாக, தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இறங்கின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற்றது.

அதிமுக - எடப்பாடி பழனிசாமி

அதிமுக – எடப்பாடி பழனிசாமி

இதன் தொடர்ச்சியாக, இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி இரு தொகுதிகளிலும் ஆளும் தவெக அரசே வெற்றிபெற்றிருக்கிறது.

இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சார்பில் வென்று, பதவிக்காக ராஜினாமா செய்துவிட்டுச் சென்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதனால், மக்களிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்” எனப் பிரசாரம் செய்தார். அதேநேரம் இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களுக்கு எதிரான மனநிலையே இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், எடப்பாடியாரின் பிரசார வியூகமும், மக்களின் எதிர்ப்பு மனநிலை என்ற பிம்பமும் கைகொடுக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *