“அதையே ஒரு தாய் செய்யும்போது ஏன் யாரும் அவருக்காகக் கைதட்டுவதில்லை?” – ராம்சரணின் மனைவி உபாசனா |upasana-konidela-questions-why-fathers-are-praised-for-basic-parenting-duties

Spread the love

வீட்டில் இந்த மனநிலை மாறாத வரை, அலுவலகங்களிலும் மாற்றம் ஏற்படாது. இது மக்களின் மனநிலையிலும், கல்வித் திட்டத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய முக்கிய விஷயம்.

ஒரு தந்தை குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் அவர் தனது பெற்றோருக்குரிய கடமையைத்தான் செய்கிறார். அதைப் புரிந்துகொள்வதுதான் மிக முக்கியம். குழந்தைகளை அந்தச் சமத்துவ மனநிலையோடு வளர்க்க வேண்டும்.

அதேபோல், தங்கள் மகன்கள் வீட்டில் ஏதாவது ஒரு சாதாரண வேலையைச் செய்தால், அதை ஏதோ பெரிய சாதனை போலத் தாய்மார்கள் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு மனைவியாக நானும் கூட சில சமயங்களில் அப்படிச் செய்திருக்கிறேன். என் கணவர் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால், அது ஒரு சாதாரண விஷயம். பெற்றோர்கள் இருவரும் செய்ய வேண்டிய இயல்பான கடமைதான் என்பதை இப்போது நான் புரிந்துகொண்டுள்ளேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *