அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.
• பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது’ என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
•உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிடக்கூறும் உத்தரவையும் நடைமுறைப்படுத்துவதில்லை.
சட்டத்தை மதிப்பவர் போல் பேசும் சிவகுமார்
ஆனால் கர்நாடக முதல்வர் சமீப காலமாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மேகதாதுவில் அணை அவசியம் என்று சட்டத்தை மதிப்பவர் போல் பொது வெளியில் பேசிவருகிறார்.
தற்போது மேட்டூர் அணைக்கு கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பியவுடன் வேறு வழியின்றி வரும் வெள்ள உபரிநீரும், கர்நாடக அணைகளின் எல்லைகளைத் தாண்டி கர்நாடக-தமிழ்நாடு எல்லைகளில் பெய்யும் மழைநீரும்தான் வருகிறது.