Lottery: மகள் பிறந்த நேரம், மகாலட்சுமியே வீடு தேடி வந்துட்டா.. 1.5 கோடியை லாட்டரியில் அள்ளிய கார்ப்பென்டர்.. யோகமோ யோகம் | Lottery: Carpenter hits jackpot day after his daughter is born: wins a 1.5 crore first prize

Spread the love

India

oi-Mani Singh S

சண்டிகர்: மகள் பிறந்த நேரம் மகாலட்சுமியே வீடு தேடி வந்தது போல, கார்பெண்டர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசாக விழுந்துள்ளது. அதிர்ஷ்டம்னா இதுதாங்க என்று சொல்கிற அளவுக்கு இந்த லாட்டரி அதிர்ஷ்டம் அவரது வாழ்க்கையை ஒரே நாளில் புரட்டிப் போட்டுள்ளது. இது குறித்த விவரங்களை காணலாம்.

இந்தியாவில் கேரளா, பஞ்சாப், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் என 13 மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. கேரளா லாட்டரிகளில் பெரிய அளவிலான பரிசுத்தொகைகள் அள்ளி கொடுக்கப்படுகின்றன. இதனால், லாட்டரி என்றதுமே பலருக்கும் கேரளாதான் நினைவுக்கு வரும்.

Lottery Carpenter hits jackpot day after his daughter is born wins a 1 5 crore first prize

மகள் பிறந்த நேரம் லாட்டரியில் யோகம்

பஞ்சாபிலும் அரசு சார்பில் லாட்டரிகள் விற்கப்படுகின்றன. பஞ்சாப்பில் கார்பெண்டர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த மறுநாளே லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. மகாலட்சுமி பிறந்த நேரத்தில், வாழ்க்கையே புரட்டி போட்டுவிட்டதே அதிர்ஷ்டம் என்று பஞ்சாப்பை சேர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி பூரிப்பில் மிதந்து வருகிறார். பஞ்சாப் கார்ப்பெண்டருக்கு நடந்த திருப்பு முனை சம்பவம் குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம்.

பஞ்சாபில் கார்பெண்டராக பணியாற்றி வருகிறார் யுத்வீர் சிங். இவருக்கு லாட்டரிகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கஷ்டத்திலேயே வாழ்கை போய்க்கொண்டு இருக்கிறது. ஒருநாளாவது நமக்கு வாழ்க்கையில் திருப்பம் ஏற்படாதா? என்ற எதிர்பார்ப்பில் டிக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதுநாள் வரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ரூ.1.5 கோடி விழுந்துள்ளது

தொடர்ந்து டிக்கெட்டுக்கு பரிசு கிடைக்காமல் பணம் இழந்து வந்ததால், யுத்வீர் சிங் மனைவியும் லாட்டரி வாங்க எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால் இதனை காதில் போட்டுக்கொள்ளாத யுத்வீர் சிங்கோ, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரூ.1.5 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். தனது மனைவி இரண்டவாது முறையாக கர்ப்பமாக இருந்ததால் குழந்தை பிறக்கும் நேரத்திலாவது அதிர்ஷ்டம் அடிக்குமா? என்று பகல் கனவு கண்டு கொண்டு இருந்துள்ளார்.

தனக்கு ஆண் குழந்தையே பிறக்க வேண்டும் என்று யுத்வீர் சிங் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த சமயத்தில், நவம்பர் 6 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. மகனை எதிர்பார்த்தோம், மகள் பிறந்து இருக்கிறாள் என கொஞ்சம் சலித்துக்கொண்ட யுத்வீர் சிங்கிற்கு மறுநாளே வாழ்க்கையில் மறக்கவே முடியாத இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. தான் ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.1.5 கோடி விழுந்துள்ளது.

தந்தையின் தலைவிதியை மாற்றிய மகள்

மகள் பிறந்த மறுநாளே, தனது வாழ்க்கை மாறிவிட்டது என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் யுத்வீர் சிங். எல்லாம் என் மகள் பிறந்த நேரம் என்று வாய் நிறைய பற்களோடு கூறிய யுத்வீர் சிங், தனது மகளுக்கு பர்கத் என்று பெயர் வைத்துள்ளாராம். பர்கத் என்றால் செழிப்பு என்று பொருளாகும்.

பிறந்த உடனயே தனது தந்தையின் தலைவிதியை மாற்றிவிட்டாள் என்பதால் இந்த பெயரை யுத்வீர் சிங் சூட்டிவிட்டாராம். பரிசாக அடித்துள்ள 1.5 கோடியை கொண்டு ஏற்கனவே உள்ள கடனையும் புதிதாக வீடு ஒன்றையும் கட்ட யுத்வீர் சிங் திட்டமிட்டுள்ளாராம்.. மீதமுள்ள பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்காக ஒதுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் யுத்வீர் சிங் கூறியுள்ளாராம்..

மகனை எதிர்பார்த்து கொண்டு இருந்தவர்க்கு வீட்டில் மகாலட்சுமி பிறந்து, செல்வத்தையும் சேர்த்தே கொண்டு வந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *