இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “ராக்ஸ்டார்’.
இன்றுவரை இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்திற்கான ஊதியம் தனக்கு எட்டு மாதங்கள் தாமதமாகத்தான் கிடைத்தது எனப் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
டேராடூனில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் இத்தகவலை அவர் பகிர்ந்திருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான், “‘ராக்ஸ்டார்’ படத்தின் தயாரிப்பாளர் ‘எனக்கு இந்த இசை பிடிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டார்.
அப்போது என் இசைக் கலைஞர்களுக்கான ஊதியத்தையும், என் பயணச் செலவுகளையும் நானே கொடுத்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் படத்திற்காக எனக்கு ஒரு பைசா கூட வரவில்லை என்ற விஷயத்தை இம்தியாஸ் அலியிடம் கூட நான் சொல்லவில்லை.