"அந்தப் படம் வந்தப்ப என்ன படிச்சுட்டிருந்தீங்க?"- சூர்யாவின் கேள்விக்கு மமிதா பதில்; கலாய்த்த ராதிகா

Spread the love

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

‘லக்கி பாஸ்கர்’ படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மமிதா பைஜூ
மமிதா பைஜூ

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, வெங்கி அத்லூரி ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது மமிதா பைஜூவிடம், ‘சூர்யாவின் எந்தப் படத்தை நீங்கள் முதன் முதலாகப் பார்த்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, “சூர்யா சாரின் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தைத்தான் நான் முதன்முதலாகப் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும், என் அண்ணாவும் நிறைய முறை அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறோம்” என்றிருக்கிறார்.

'விஸ்வநாத் & சன்ஸ்' டீம்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீம்

‘அப்போது நீங்கள் என்ன படித்துக்கொண்டிருந்தீர்கள்?’ என்று சூர்யா கேட்க, ‘நான் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்’ என்று மமிதா கூற, ‘கேட்காமலேயே இருந்திருக்கலாம்’ என்று சொல்லி ராதிகா சிரித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *