பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள்’ வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி! | Aam Aadmi has strongly condemned video shared by Harbhajan Singh.

Spread the love

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் டர்பன் அணிந்த சிலர் சாலையோரத்தில் நிலைகுலைந்து, நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

அந்த வீடியோவைப் பகிர்ந்த ஹர்பஜன் சிங், “என் பஞ்சாபின் மீது தீய கண் பட்டுவிட்டது, நண்பா… அரசு பஞ்சாபையும் அதன் இளைஞர்களையும் சீரழித்துவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது அழுகைதான் வருகிறது. என் பஞ்சாபை மன்னியுங்கள்… பஞ்சாபை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஒரு காலத்தில் செழிப்பு, துணிச்சல் மற்றும் வீரத்திற்குப் பெயர் பெற்ற பஞ்சாப்.

ஆனால் இன்று, அதே பஞ்சாபின் இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. என் பஞ்சாபைக் காப்பாற்றுங்கள். பஞ்சாபின் இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்” என உருக்கமாகப் பதிவிட்டு, போதைப்பொருள் பிரச்னையை ஆம் ஆத்மி அரசு கையாளும் விதத்தை விமர்சித்து அரசியல் ரீதியான தாக்குதலைத் தொடுத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *