இந்த நிகழ்வு ஏன் மதிப்பு மிக்கது?
உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட `தி வீக்கெண்ட்’ (The Weeknd) போன்ற இசை ஜாம்பவான்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வது ஒரு மாபெரும் அங்கீகாரமாகும். இது வெறும் ஒரு சினிமா விருது விழா அல்ல.
சினிமா, இசை, மற்றும் அனிமேஷன் எனப் பல கலை வடிவங்கள் சங்கமிக்கும் ஒரு சர்வதேசப் பெருவிழா. இதில் இந்தியா சார்பாக ராஷ்மிகா முன்னிறுத்தப்படுவது இந்தியத் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும்.
ராஷ்மிகா நிஜ வாழ்க்கையிலேயே ஒரு தீவிர அனிமே ரசிகை. அனிமே கதைகளில் உள்ள ஆழமான உணர்வுகள் மற்றும் கற்பனைத்திறன் குறித்து அவர் பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார். எனவே, அவரது பங்கேற்பு வெறும் பெயரளவிலான ஒன்றாக இல்லாமல், உண்மையான ஈடுபாட்டைக் குறிக்கிறது.
அனிமே விருதுகளின் சிறப்புகள்
இது குளோபல் அனிமே விருதுகளின் 10-வது ஆண்டு விழா. டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற `கிராண்ட் பிரின்ஸ் ஹோட்டல் ஷின் டகனாவா’-வில் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு `Dan Da Dan Season 2′, ‘My Hero Academia Final Season’, ‘The Apothecary Diaries Season 2’ போன்ற உலகப்புகழ் பெற்ற அனிமே தொடர்கள் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய நடிகைகள், மெக்ஸிகன் பாடகர்கள், ஆஸ்திரேலியக் கலைஞர்கள் எனப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் விருது வழங்குநர்களாகக் கலந்துகொள்ளும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட விழா இது.