அன்பில் – உதயநிதி ஜெயில் மீட்டிங்… ஆதவ் குறித்து டிஸ்கஷனா? – Kumudam

Spread the love

திமுகவின் கடந்த கால ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி மற்றும் பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ 100 கோடிக்கும் மேலாக பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் கைதாகியுள்ளனர். அவரைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த (அக்.,26 தேதி) கைது செய்து தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தவெக அரசால் தன்னுடைய நண்பனான அன்பில் மகேஷ் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், உதயநிதி இந்த கைது நடவடிக்கை குறித்து  தவெக அரசுக்கு உடனடியான கண்டனத்தை தெரிவிக்கவில்லை. ஆறு மணி நேரம் கழித்தே தனது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே அன்பில் மற்றும் உதயநிதி இருவருக்குமிடையே ஏதோ நட்பில் மனகசப்பு இருந்துவருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், தற்போது இந்த மனகசப்பு அதிகமாகி விட்டது போல என்று ஒரு தரப்பு பேசப்பட்டு வருகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி புழல் சிறையில் கைதாகியிருக்கும் தன்னுடைய  உயிர் நண்பனை மறுநாளே ஓடோடி பார்க்கச் சென்றார்.  ஒரு முறை இல்லாமல் இரண்டு முறை தனது நண்பனை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்து எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அவர்கள் பேசியதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் உதயநிதி மகஷேயிடம்  கூறியது என்னது தெரியுமா?  கரூரில் விஜய் பரப்புரை வாகனம், காவல்துறை சொன்ன இடத்தில் நிற்காமல் நெரிசலான இடத்துக்கு செல்ல தூண்டியதே ஆதவ் தான். அதற்கு ஆதாரமாக வாக்கி டாக்கி பதிவும் நம்மிடம் இருந்தது. அதன்பின், தவெக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வந்த போது அப்போது ஆதவ், அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை,நேபாளம் நாடுகளைப் போல “GEN Z ‘புரட்சி‘ என்று சமூக வலைத்தள பதிவில் பதவிட்டிருந்தார்.

அதைவைத்தே அவர்மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யலாம் என்று கூறியபோது. அவன் என் நண்பன், வேண்டாம்‘ என்று காப்பாற்றினாயே இப்போது உன்னை அப்படி அவர் பார்த்தாரா? என்று வாழைப்பழத்தில் ஊசி குத்துவதுபோல கேட்டாராம் உதயா இதற்கு பதில் ஏதும் கூறமுடியாமல் மௌனமாக நின்றிருக்கிறார் அன்பில். அன்றே ஆதவ் மீது வழக்கு பதிவு செய்திருந்தால் இன்றைக்கு உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா நண்பா ? போன்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *