“அமித்ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்…” – ரிப்போர்ட் ரெடி! |tn-governor-report-amit-shah-vijay-tvk-majority-issue-ttv-dinakaran-mla-kamaraj-row

Spread the love

இதை அறிந்த டெல்லி மேலிடம் கடும் டென்சனாகிவிட்டது. உடனடியாக தினகரனை தொடர்பு கொண்டு, என்ன நடந்து என கேட்டனர். அவர் தனது எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் ஏற்கனவே தன்னிடம் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்.

அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக ஆளுநரை சந்திக்க சொல்ல, அவசர அவசரமாக ஆளுநர் அலுவலகத்தி்ற்கு வந்தார். அங்கு ஆளுநரை சந்தித்து தனது எம்.எல்.ஏ-வை விலை பேசியிருப்பதையும்,குதிரை பேரம் நடப்பதையும் புகாராக சொல்லிவிட்டார்.

அதன்பிறகு எஸ்.காமராஜ் தினகரன் லைனுக்கு வந்துவிட்டார். தினகரன் எஸ்.காமராஜ் இருவருமே நள்ளிரவு ஆளுநரை சந்தி்த்து விளக்கம் கொடுத்தனர்.

அமமுக - டிடிவி.தினகரன்

அமமுக – டிடிவி.தினகரன்

அதன் அடிப்படையில் ஆளுநர் கொடுத்த ஆலோசனையின்படி கிண்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவரங்களை எல்லாம், இரவோடு இரவாக ஆளுநர் ரிப்போர்ட்டாக ரெடி செய்துவிட்டார்.

இன்று காலை மேற்கு வங்கத்தில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு அமித்ஷா சென்றுவிட்டு, மதியம் டெல்லி திரும்ப உள்ளார். அதன்பிறகு தமிழக ஆளுநர் அர்லேக்கர், அமித்ஷாவிடம் இந்த ரிப்போர்ட்டை அனுப்ப உள்ளார்.

அந்த ரிப்போர்ட் அடிப்படையில் தான் தமிழகத்தில் புதிய அரசு பதியேற்பதற்கான சாத்திய கூறுகள் அமையும் என்கிறார்கள். குதிரை பேரம் நடந்தது உறுதியானால், தமிழகத்தில் தேர்வான எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. டெல்லி தலைமையும் அந்த மூடுக்கே வந்துள்ளார்கள். அமித் ஷாவின் சிக்னலுக்காக மட்டுமே இப்போது ஆளுநர் காத்திருக்கிறார் என்கிறார்கள்..

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *