விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியதில் அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது.
இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக ஆளுநர் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவுக் கடிதங்களை கொடுத்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது ஆளுநர் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது.
ஆளுநரை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக ஆளுநரை இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.