அமித் ஷாவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு; அவசரக் கூட்டத்திற்கு அஜித்பவார் மனைவி அழைப்பு | Nationalist Congress Party (NCP) leaders meet Amit Shah; Ajit Pawar’s wife calls for an urgent meeting

Spread the love

அமித் ஷாவுடனான சந்திப்பின்போது அமித் ஷாவும் பிற பாஜக தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக நீடிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் இரு கட்சிகளின் இணைப்புக்கு சரத்பவார் ஆர்வம் காட்டினார். ஆனால் இப்போது அதில் ஆர்வம் காட்டுவதை சரத்பவார் கைவிட்டுவிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் அதிருப்தி குறித்து மூத்த தலைவர்சுனில் தட்கரே கூறுகையில், “கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. டெல்லி கூட்டம் முன்னரே திட்டமிடப்பட்டது. எங்கள் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளனர். கட்சி கூட்டத்தில் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவது குறித்து நாங்கள் ஆலோசிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

கட்சியை சரத்பவார் கட்சியுடன் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு அது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றார். இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் அனைத்து கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அஜித்பவார் மகன்கள் பார்த் பவார் மற்றும் ஜே பவார் அனைத்து மூத்த தலைவர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று கட்சியிடம் உறுதியளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *