அஜித் குமார் ரேசிங் உடன் ரிலையன்ஸ் கூட்டணி: 9 புதிய பிஸ்கட் அறிமுகம்|Ajith Kumar Racing Joins Reliance for New Biscuit Launch!

Spread the love

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் ‘இன்டிபென்டன்ஸ்’ என்கிற பெயரில் 9 புதிய பிஸ்கட் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிஸ்கட் அறிமுகம் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து நடந்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எஃப்.எம்.சி.ஜி (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தனது ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence) பிஸ்கட்டுகளை 9 புதிய ரகங்களுடன் விரிவுபடுத்தியுள்ளது.

அஜித் குமார் - ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிஸ்கட்

அஜித் குமார் – ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிஸ்கட்

இந்தப் புதிய ரகங்கள் தமிழ்நாட்டில் 2026 நவம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

நிறுவனத்தின் பிஸ்கட் வணிகத்திற்கு தமிழ்நாடு ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இங்கு அதிகரிக்கப்பட்டுள்ள உற்பத்தித் திறன், வணிகத்தை விரிவுபடுத்தவும் அதிகப்படியான நுகர்வோரைச் சென்றடையவும் துணைபுரியும்.

‘இன்டிபென்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டின் அறிமுகமானது ‘அஜித் குமார் ரேசிங்’ அமைப்புடனான பிராண்ட் கூட்டாண்மையுடன் நடைபெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *