கேரளம்: இன்ஸ்டாவில் பெண் குரலில் பேசி வரவழைத்து மாணவன் கொலை; காதல் விவகாரமா எனப் போலீஸ் விசாரணை | Kerala: Student murdered after being lured by someone posing as a woman on Instagram

Spread the love

திட்டமிட்டு அபிராமைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்த கும்பல், அவரைக் கீழே தள்ளிக் காலால் மிதித்துத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சணல் சாக்கில் கட்டி பாங்கப்பாறை பேரூர் சந்திப்பு அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத புதரில் வீசிச் சென்றதாகக் கூறினர்.

குற்றவாளிகள் அளித்த தகவலின்படி போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்த அபிராமின் சடலத்தை மீட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன், ஒரு சிறுமி மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான உமர் முக்தார் (22) ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட மாணவன் அபிராம்

கொலைசெய்யப்பட்ட மாணவன் அபிராம்

பிடிபட்ட 17 வயது சிறுவனை நேற்றிரவு சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் தடயங்களைச் சேகரித்தனர். கைதானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனர் அருள் பி. கிருஷ்ணா தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட ஒரு சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்த அபிராமின் நண்பரைத் தீர்த்துக்கட்டவே இந்தக் கும்பல் முதன்முதலில் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நண்பரைப் போனில் வரவழைக்க முயன்றபோது, ஏதோ விபரீதத்தை உணர்ந்த அவர் அங்கு செல்லவில்லை.

இதையடுத்து, அதே விவகாரத்தில் அபிராமுடன் பேசி வரவழைத்துள்ளனர். அங்கு சென்றபோது ஆபத்தை உணர்ந்து தப்பியோட முயன்ற அபிராமைப் பிடித்து அக்கும்பல் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாகவும் ஸ்ரீகாரியம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாயமான அபிராமைத் தேடுவதில் போலீசார் தொடக்கத்தில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, அவரது உறவினர்களும் பொதுமக்களும் நேற்றிரவு ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *