அமைச்சர்களுக்கு இலாகா இல்லை, பட்ஜெட்டுக்குத் திட்டம் இல்லை! -புதுச்சேரியை முடக்கிய முதல்வர் ரங்கசாமி

Spread the love

ஆனால் புதுச்சேரியில் நிதியமைச்சர் யார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை வழக்கமாக முதலமைச்சர்கள்தான் நிதித்துறை பொறுப்பையும் வைத்திருப்பார்கள்.

அதனடிப்படையில் நீண்டகாலமாக பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார் முதல்வர் ரங்கசாமி. பட்ஜெட் முன்தயாரிப்பு பணிகள் துறை வாரியாக நடத்தப்பட வேண்டும். இதை அந்தந்த துறை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

அதேபோல நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதி, புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பார்கள். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசித்து முடிவுகள் எடுக்கும். ஆனால் தற்போது வரை இதில் எதுவும் நடைபெறவில்லை.

முதல்வர் ரங்கசாமியுடன் இலாகா இல்லாத அமைச்சர்கள்

முதல்வர் ரங்கசாமியுடன் இலாகா இல்லாத அமைச்சர்கள்

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தால் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். விவாதத்துக்கு துறை அமைச்சர்கள் பதில் தர வேண்டும். சட்டசபையில் கேள்வி பதில்களும் வரும். இதற்கெல்லாம் முன்பு சட்டசபை கூடுவதை எம்.எ.ல்.ஏ-க்களிடம் தெரிவித்து அவர்களிடம் கேள்விகளைப் பெற வேண்டும்.

கேள்விகளுக்கான பதில்களை அதிகாரிகள் தயாரித்து, அமைச்சர்களோடு விவாதிக்க வேண்டும். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த நடைமுறையை எதிர்கொள்வார்கள்.

தற்போதைய சட்டசபையில் இரண்டு அமைச்சர்கள் புதியவர்கள். அவர்கள் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். இப்படியான சூழலில் அமைச்சர்களுக்கு இலாகா அறிவிக்காமல் அரசு மெத்தனமாக இருப்பது, மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *