வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? – வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன?

Spread the love

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அவர் ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.99.90 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அந்த கட்டுமானங்களுக்காக சத்திய ஞானசபை வளாகத்தில் இருக்கும் பெருவெளி தேர்வு செய்யப்பட்டது.

சத்திய ஞானசபை, தர்ம சாலை, அருட்பெருஞ்சோதி மண்டபம் தவிர்த்து, மீதமிருக்கும் திறந்தவெளியே `பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், `அருட்பெருஞ்சோதியை தரிசிப்பதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கூடும் இடமான பெருவெளியில், சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

வள்ளலார் சர்வதேச மையம்

வள்ளலார் சர்வதேச மையம்

வடலூரிலேயே வேறு ஒரு இடத்தில் அதை அமைக்க வேண்டும்’ என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன், சீமான் போன்றவர்களும், சன்மார்க்க அன்பர்களில் ஒரு தரப்பினரும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி 2024 பிப்ரவரி 17 அன்று, காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதும், சர்வதேச மையத்திற்கான பணிகள் தொடங்கியது. அப்போது சத்திய ஞானசபைக்கு இடம் கொடுத்த பார்வதிபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அதன் தொடர்ச்சியாக, பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், 2024 அக்டோபர் 10-ம் தேதி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *