அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Spread the love

மீதமுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மீது 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைப்பெற்றது. அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கூறும் போது, ” லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 7 பேர் மீதும் குற்றச்சதியும் நிதி இழப்போ இல்லை என கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டது.

 சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

எனவே இந்த முறைக்கேட்டில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல’ என வாதிட்டனர்.

இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *