வெளிநாடுகளில், குடும்பத்தைப் பிரிந்து, பல வருடங்களாக உழைக்கும் 40+ வயதுள்ள ஒவ்வொரு NRI-க்கும் ஒரு ஆழமான கனவு உண்டு. “இன்னும் சில வருஷத்துல ஊருக்குப் போயிடணும். எந்த ஆபீஸ் டென்ஷனும் இல்லாம, நம்ம ஊர்ல, நம்ம வீட்ல நிம்மதியா வாழணும். ஆனா, வேலைக்குப் போகலைனா மாசச் செலவுக்கு என்ன பண்றது?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.
ஒரு நிதி நிபுணராக, உங்களின் இந்த நியாயமான கனவையும், அதனுள் இருக்கும் ஆழமான பயத்தையும் நான் அறிவேன்.
பெரும்பாலான NRI-கள், பல ஆண்டுகள் கடினமாக உழைத்து ஒரு பெரிய தொகையைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், அந்தப் பணத்தை வெறும் NRE/NRO ஃபிக்சட் டெபாசிட்டுகளில் (FD) போட்டுவிட்டு, மாதம் ஒரு தொகையை வட்டியாகப் பெறலாம் என்று நம்புவார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு! இன்று FD வட்டி விகிதம் வெறும் 6.5% முதல் 7% ஆக மட்டுமே உள்ளது.
இதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் மாதம் ₹1 லட்சம் வருமானம் வேண்டும் என்று நினைத்து, ₹1.7 கோடியை FD-யில் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 7% வட்டியில் இன்று உங்களுக்கு மாதம் ₹1 லட்சம் கிடைக்கலாம். ஆனால், இந்தியாவில் பணவீக்கம் (Inflation) 7% வேகத்தில் வளர்கிறது.
அடுத்த 10 வருடத்தில், உங்கள் மாதாந்திரச் செலவு ₹2 லட்சமாக மாறியிருக்கும். ஆனால் உங்கள் FD அதே ₹1 லட்சத்தைத்தான் கொடுக்கும். நாளுக்கு நாள் மருத்துவச் செலவுகளும் (14% Medical Inflation) கூடிக்கொண்டே போகும். உங்கள் அசலையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செலவு செய்யும் நிலை வந்தால், 15-20 வருடங்களில் உங்கள் மொத்த சேமிப்பும் காலியாகிவிடும்.
“ஊருக்கு வந்து நிம்மதியா வாழலாம்னு நெனச்சோமே, கடைசியில கையில் காசில்லாம போச்சே!” என்ற வேதனை வரக் கூடாது அல்லவா?
இதற்கு ஒரே தீர்வும், தப்பிக்கும் வழியும் – மியூச்சுவல் ஃபண்டுகளில் “Systematic Withdrawal Plan’ (SWP) முறைதான். உங்கள் பணத்தை பணவீக்கத்தை வெல்லும் ஈக்விட்டி (Equity) மற்றும் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து, அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான ₹1 லட்சத்தை மட்டும் ‘பாஸிவ் இன்கம்’ (Passive Income) ஆக எடுத்துக்கொள்வது.