“அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக்குறைவாக பேசவில்லை!” – சொல்கிறார் விசிக ஏழில் கரோலின் | “Minister Nirmal Kumar Did Not Speak Disrespectfully,” Says VCK’s Ezil Caroline

Spread the love

எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் இருக்கும் தி.மு.க-வை தாக்குவது ஏன்?

“சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் அவர்கள் மிசா சட்டத்தில் தி.மு.க தலைவர் அண்ணன் ஸ்டாலின் கைதாகவில்லை என்ற தொனியில் பேசியதை வி.சி.க உள்ளிட்ட பல அமைப்புகளை ஏற்கவில்லை. அண்ணன் ஸ்டாலின் அவர்களும் “முதல்வர் கண்ணியமாக பேச வேண்டும்’ என வீடியோ வெளியிட்டார். அதுவரை நாங்கள் தி.மு.க-வை விமர்சிக்கவில்லை. ஆனால்,  முதல்வர் விஜய்யை கண்டித்து தி.மு.க-வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் மாவட்டச் செயலாளர்களும் முக்கிய புள்ளிகளும் பேசிய விதம் கடும் கண்டனத்துக்குரியது. த.வெ.க அமைச்சர்கள் பேசியவற்றை கண்டிப்பது அவர்கள் உரிமை, அதேநேரம் ‘பிறப்பு’ குறித்து தரம்தாழ்ந்து பேசும் அளவுக்கு தி.மு.க தரக்கெட்டு பேசும்போது வேடிக்கை பார்க்க முடியுமா.? 

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் எல்லைமீறி அவதூறு பரப்புவதாக சொல்கிறார்களே!”

“ஆளும்கட்சியையும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும் எதிர்க்கட்சியை ஆளும்கட்சி விமர்சிப்பதும் இயல்புதான். ஆனால், பெண்களையும் பிறப்பையும் குறித்து வைத்து தாக்குவது என்னமாதிரியான அரசியல்? அமைச்சர் நிர்மல்குமார் எங்காவது பெண்களையோ, பிறப்பு குறித்தோ பேசினாரா.. அரசியல் குற்றச்சாட்டுகளைதானே வைத்தார்.. பதிலுக்கு தி.மு.க-வும் அரசியல்ரீதியாக பதிலளிக்காமல் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கிறார்கள்.  அண்ணா, பெரியார், கலைஞர், கண்ணியம், கட்டுபாடு, கொள்கை என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க-வினர் உண்மைமுகம் இதுதானா என்ற கேள்வியை நாங்கள் முன்வைத்தோம். அதிலென்ன தவறு இருக்கிறது?”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *