Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், ஆந்திராவில் உயிருடன் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் போலி ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில் 7 பேர் ஒடிசாவையும், 2 பேர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் பல தொழிலாளர்கள் போலியான ஆதார் அட்டையை பயன்படுத்தி வேலை செய்து வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஆந்திராவில் உயிருடன் இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசாவைச் சேர்ந்த பூர்ணிமா ஜுவாங்கா என்ற பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆந்திரா பணிபுரிந்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொழிலாளர்களை பணியமர்த்த மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் ஆதார் அட்டை மோசடி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு பின் தலைமுறைவாக உள்ள இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேர்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சரி பார்த்து பணியில் அமர்த்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.