“‘அயலி’ சீரியல்ல என்னைச் செல்வநாயகியா மக்கள் ஏத்துக்கிட்டாங்க” – கவிதா |”The audience has embraced me as Selvanayaki in the series ‘Ayali’.” — Kavitha

Spread the love

அந்தச் சீரியல்ல நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்குக் காரணமும் இருக்கு. அதுல ‘மாமி’ ரோலுன்னு சொன்னாங்க. எனக்கு அந்த ஸ்லாங் பேசி நடிக்கணும்னு ஆசை இருந்தது.

அந்தச் சீரியல் டீமை எனக்கு ஏற்கெனவே தெரியும். அதான் கேமியோவா இருந்தாலும் நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா அதுக்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும்னு நான் நினைக்கல.

எவ்வளவு சீரியல் பண்ணியிருந்தாலும் அந்தச் சீரியலோட ‘பங்கஜம் மாமி’ கேரக்டர் எனக்கு நல்ல ரீச் கொடுத்தது. அந்தச் சீரியல் பண்ண அப்புறம் என்னை எல்லாரும் பங்கஜம் மாமி என்று கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க” என்றார்.

மேலும் பேசியவர், “சிறந்த வில்லின்னு தமிழக அரசின் மாநில விருது கிடைச்சது. எனக்கு விருது கொடுக்கிறாங்கன்னு என்னால நம்பவே முடியல. சேனல்ல இருந்து அவார்டு கொடுக்கிற அப்பல்லாம் நாமினேட் ஆகியிருக்கேன்.

ஆனா விருது கிடைத்ததில்லைன்ற ஆதங்கம் இருந்தது. எனக்கு ஸ்டேட் அவார்ட் கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அளவே இல்லாத ஆனந்தமா இருந்தது. என்னுடைய கரியரின் தொடக்கத்துல சில படங்கள்ல சின்னச் சின்ன ரோல்ஸ் பண்ணியிருக்கேன்.

ஆனா, அதுல நான் எதிர்பார்த்த திருப்தி எனக்குக் கிடைக்கல. அப்போதான் எனக்கு, எஸ்.பி. முத்துராமன் சார் இயக்கத்துல வந்த ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

அந்தச் சீரியல் நான் பண்ணும் போது நான் ஹீரோயின் ரோல் பண்ணது எனக்கு மனநிறைவா இருந்தது. அப்புறம் தொடர்ச்சியா சீரியல் வாய்ப்புகள் கிடைச்சதால படம் பண்றதை நிறுத்திட்டேன்” எனப் பகிர்ந்து கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *